close
Choose your channels

ஆயிஷா போயிருவாங்க.. தனலட்சுமியின் பதிலை அடுத்து கமல்ஹாசனின் அதிரடி!

Sunday, November 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆயிஷா எவிக்ட் ஆகி இந்த நிகழ்ச்சியிலிருந்து போயிருவாங்க.. என்று தனலட்சுமி கூறியதை அடுத்து கமல்ஹாசன் அதிரடியாக இந்த வாரம் எலிமினேட் ஆகும் நபரின் பெயரை அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட 5 பேர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஷெரினா வெளியேறிவிட்ட தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இந்த வாரம் யார் வெளியே போவார்கள் என்பதை கணிக்க கமல்ஹாசன் கேட்கிறார். அப்போது ஆயிஷா, ‘நான் போகவேண்டுமே என்று ஆசை என்று கூறினார். ஷெரினா கூறும்போது, ‘எனக்கு எதுவாக இருந்தாலும் சரி, 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் 50% போகவேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார்.

இதுகுறித்து ஏடிகே கூறியபோது ஆயிஷா எலிமினேஷன் ஆக மாட்டார் என்று எனக்கு தோன்றுகிறது என்று கூறினார். ரக்சிதா கூறியபோது, ‘ஷெரினா வெளியே போவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சரியாக கணித்தார்.

இதனை அடுத்து தனலட்சுமி பேசியபோது ’ஆயிஷா போயிருவாங்க என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். அப்போது ஆயிஷாவின் முகம் இறுகியது. இதனை அடுத்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரின் பெயர் கொண்ட அட்டையை எடுத்து கமல்ஹாசன் எடுத்து காண்பிப்பதுடன் இன்றைய புரொமோ முடிவுக்கு வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.