த்ரிஷாவுடன் மோதும் விஜய் ஆண்டனி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,December 16 2022]

நடிகை த்ரிஷா நடித்த திரைப்படம் ரிலீஸாகும் அதே நாளில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகிய த்ரிஷாவின் ’ராங்கி’ என்ற திரைப்படம் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ’தமிழரசன்’ என்ற திரைப்படமும் அதே டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து த்ரிஷா மற்றும் விஜய் ஆண்டனி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி, சுரேஷ்கோபி, ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதாரவி, ரோபோ சங்கர், கஸ்தூரி உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தமிழரசன்’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஆக்ஷன் மற்றும் த்ரில் கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பொன்னியின் செல்வன்' படத்தை அடுத்து லைகா-த்ரிஷா இணையும் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்புகளில் ஒன்றான மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் குந்தவை என்ற கேரக்டரில் த்ரிஷா நடித்திருந்த

உதயநிதியை சந்திக்க போகிறேன்.. 'வாரிசு' தியேட்டர் பிரச்சனை குறித்து தில்ராஜூ

விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இரு திரைப்படங்களுக்கும் சமமாக தியேட்டர்கள் பிரித்துக்

காவி உடையணிந்து இதையெல்லாம் செய்யலாம், நடிக்க மட்டும் கூடாதா? தீபிகாவுக்கு ஆதரவளித்த தமிழ் நடிகர்

நடிகை தீபிகா படுகோனே 'பதான்' என்ற திரைப்படத்தில் காவி உடை அணிந்து ஆபாசமாக நடித்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் காவி உடை அணிந்து இதையெல்லாம் செய்யலாம்

மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்: 'இந்தியன் 2' அரிய புகைப்படத்தை வெளியிட்ட கமல்!

 உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.

'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: குஷ்பு வேண்டுகோள் 

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என ரசிகர்களிடம் நடிகை குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.