ஜெஸ்ஸி த்ரிஷாவை மீண்டும் பார்க்க ஒரு சந்தர்ப்பம்

  • IndiaGlitz, [Monday,July 03 2017]

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த 'விண்ணை தாண்டி வருவாயோ' வெற்றி படம் இன்றளவும் காதலர்களின் மனம் கவர்ந்த படங்களின் பட்டியலில் உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் ஜெஸ்ஸியாகவே த்ரிஷா வாழ்ந்தார் என்றும் கூறலாம். இந்த படம் வெளியான நேரத்தில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஜெஸ்ஸி என்று பெயர் வைத்ததாக கூறப்பட்டது.

த்ரிஷாவின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத இந்த ஜெஸ்ஸி கேரக்டர் மீண்டும் அவரை தேடி வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம், தற்போது த்ரிஷா நடித்து வரும் முதல் மலையாள திரைப்படமான 'ஹேய் ஜூட்' என்ற படத்தில் அவர் மலையாள கிறிஸ்துவ பெண் கேரக்டரில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ரொமான்ஸ் படமான இந்த படத்தில் கிட்டத்தட்ட விடிவி ஜெஸ்ஸி போலவே த்ரிஷாவின் கேரக்டர் அமைந்துள்ளதாகவும் எனவே த்ரிஷாவை மீண்டும் ஜெஸ்ஸி வடிவில் ரசிகர்கள் பார்க்க ஒரு சந்தர்ப்பம் விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'நேரம்' நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்த வரும் த்ரிஷா ஏற்கனவே பேட்டி ஒன்றில் இந்த படத்தின் கதை மிகவும் வலுவானது என்றும், தனது முழு நடிப்புத்திறமையை வெளிப்படுத்த கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக இந்த படத்தை தான் கருதுவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

2017: முதல் ஆறு மாதங்களில் வெற்றி பெற்ற கோலிவுட் திரைப்படங்கள்

ஒவ்வொரு வருடமும் கோலிவுட் திரையுலகில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வந்தாலும் அவற்றில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது

பாவனா பலாத்கார விவகாரத்தில் பிரபல நடிகைக்கு தொடர்பா?

பிரபல தமிழ், மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளானார் என்பது தெரிந்ததே. இதுகுறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்...

தமிழக அரசின் கேளிக்கை வரி: முதல்வரை சந்திக்கிறார் விஷால்

ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி பிரச்சனை தொடர்பாக ஒருபக்கம் தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அமைச்சர்களை சந்தித்து பேசி வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலும் இதுகுறித்த நடவடிக்கையில் களமிறங்கியுள்ளார்...

சூர்யா-சுதா இணையும் படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இவ்வாரம் வெளியாகும் என்றும் இதனையடுத்து டீசர், பாடல்கள் அடுத்தடுத்து வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது...

ஜிஎஸ்டி, கேளிக்கை வரி: மதன்கார்க்கியின் அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற அறிவித்துதான் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால் ஒருசில மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி மாநில அரசின் வரியும் விதிக்கப்படுவதால் இரட்டை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது....