இறுதிக்கட்ட படப்பிடிப்பில் த்ரிஷாவின் அடுத்த படம்: விரைவில் ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Saturday,September 15 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான த்ரிஷா, விஜய்சேதுபதியுடன் நடித்த '96' திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா நடித்து கொண்டிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

த்ரிஷா நடிப்பில் இயக்குனர் திருஞானம் இயக்கி வரும் திரைப்படம் 'பரமபதம் விளையாட்டு'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

24ஹவர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நந்தா மற்றும் ரிசார்ட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அம்ரிஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

More News

தனுஷின் வடசென்னை ரிலீஸ் தேதியில் மாற்றமா?

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதர்வாவுக்கு ஜோடியாகும் 'கடைகுட்டி சிங்கம்' நடிகை

கார்த்தி, சாயிஷா நடித்த 'கடைகுட்டி சிங்கம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை பிரியா பவானிசங்கர், அதர்வாவின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

சீயான் விக்ரமின் 'சாமி 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று திரைப்படங்கள் ரிலீஸ் என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெரிய ஸ்டார்களின் படங்கள் மட்டும் வியாழக்கிழமையே

பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் இல்லை: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வின்னராக ஆரவ் இருந்தாலும் இன்றளவும் மக்களின் மனதை வென்ற ஒரே போட்டியாளர் ஓவியாதான். .

சந்தோஷ் சிவனின் சர்ச்சை டுவீட்: கடும் கோபத்தில் தயாரிப்பாளர்கள்

இயக்குனர், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தயாரிப்பாளர்களை கிண்டல் செய்து டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தயாரிப்பாளர்கள் ஹீரோயினுக்கு சம்பளம் கொடுக்கும்போது