விஜய், விஜய்சேதுபதி படங்களின் அபூர்வ ஒற்றுமை: த்ரிஷா வெளியிட்ட வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,October 15 2020]

தளபதி விஜய் நடித்த ’கில்லி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’96’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப் பெரிய வெற்றிப்படங்கள் என்பதும் இந்த இரண்டு படங்களிலும் நடிகை த்ரிஷா தான் ஹீரோயின் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் த்ரிஷா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரண்டு படங்களுக்கும் இடையில் உள்ள அபூர்வ ஒற்றுமை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’கில்லி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது இருவரும் பேருந்தில் விமான நிலையத்தை நோக்கி செல்வார்கள். அதேபோல் 96 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் விமான நிலையத்தை நோக்கி செல்வார்கள்.

அதன்பின்னர் ’கில்லி’ படத்தில் விமான நிலையத்தில் த்ரிஷாவிடம் டிக்கெட்டை விஜய் கொடுப்பது போலவே 96 படத்திலும் த்ரிஷாவிடம் விஜய்சேதுபதி டிக்கெட்டை கொடுக்கும் காட்சி உண்டு. பின்னர் இருவரும் உணர்ச்சி பிழம்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருக்கும் காட்சிகளும் இரண்டு படங்களிலும் உண்டு.

அதன் பின்னர் த்ரிஷாவை வழியனுப்பிவிட்டு விமான நிலையத்தில் இருந்து விஜய் திரும்புவதும், அதேபோல் த்ரிஷாவை அனுப்பிவிட்டு விஜய் சேதுபதி காரில் திரும்புவதுமாக காட்சிககளும் விமானத்தில் த்ரிஷா தனியாக உட்கார்ந்து வருத்தப்படுவது போன்ற காட்சிகளும் இரண்டு படத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ளது.

இந்த அபூர்வ ஒற்றுமையை குறிப்பிடும் வகையில் த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

விஜய்‌ சேதுபதியின்‌ திரையுலக வாழ்க்கைக்கு இது நல்லதல்ல: சீமான் அறிக்கை

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ள விஜய்சேதுபதிக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளது.

இதனால் தான் ரஜினிகாந்த் உயர்ந்து நிற்கிறார்: பிரபல தயாரிப்பாளர் பாராட்டு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தின் சொத்து வரி குறித்த பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

போதைப்பொருள் விவகாரம்: அஜித் பட வில்லன் வீட்டில் ரெய்டு!

போதைப்பொருள் விவகாரம் பாலிவுட் திரை உலகை மட்டுமன்றி கன்னடத் திரையுலகிலும் ஆட்டுவித்து வருகிறது என்பது தெரிந்ததே. பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி

விஷாலின் 'சக்ரா' வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை வரும் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது

பிக்பாஸ் ரம்யா ஆர்மிக்கு இன்ப அதிர்ச்சி: வெளியானது அதிரடி அறிவிப்பு

பிக்பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் முதல் நாள் முதலே சிரித்த முகத்துடன் உள்ளார். யாருடனும் வம்புக்கும் போகாமல் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும்