H-1B விசாக்களில் சிறு தளர்வு– அமெரிக்க வெளியுறவுத் துறையின் புதிய அறிவிப்பு!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜுன் 22 ஆம் தேதி H-1B விசாக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அமெரிக்காவில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வேலைகளைப் பார்ப்பதற்கு அமெரிக்க அரசு இந்த H-1B விசாக்களை வழங்குகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் கடுமையான பொருளதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. அமெரிக்க நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளை சொந்த நாட்டு மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்ற அடிப்படையில் H-1B விசாக்களுக்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதாக அதிபர் ட்ரம்ப் கருத்துக் கூறியிருந்தார்.

அதன்படி இந்த ஆண்டு இறுதிவரை H-1B விசாக்களுக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பொறியியல் சார்ந்த பட்டப்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்க செல்லும் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளுக்கு தடை ஏற்படும் எனக் கூறப்பட்டது. ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் உட்பட பல வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தற்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்த அறிவிப்பில் ஏற்கனவே H-1B விசாக்கள் மூலம் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றியிருந்தால் அவர்கள் மீண்டும் H-1B விசாக்களைப் பெற்று அமெரிக்காவிற்கு வந்து பணியாற்றலாம். ஆனால் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய நிறுவனத்தில் பணியாற்ற விரும்பினால் மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. H-1B விசா பெறுபவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை அழைத்து வருவதிலும் எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இரண்டாக மடித்து வைக்கும் முதல் ஸ்மார்ட்போன்- மைக்ரோசாப்ட்டின் புது அறிமுகம்!!!

முதல்முறையாக மடித்து வைக்கும் ஸ்மாட்போனை தயாரிக்க இருக்கிறோம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்

ரயில் தண்டவாளத்தில் வீல்சேருடன் சிக்கிகொண்ட 66 வயது முதியவர்: அதிர்ச்சி வீடியோ 

அமெரிக்காவில் வீல் சேரில் சென்று கொண்டிருந்த ஒருவர் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

2 மாத குழந்தையை 45 ஆயிரத்துக்கு விற்ற தாய்: கொரோனா ஊரடங்கால் வறுமை?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வேலை இன்றி வருமானம் இன்றி கோடிக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் மேனேஜர் தற்கொலை: வேலைச்சுமை அதிகமா?

பிடிஐ செய்தி நிறுவனத்தின் மேனேஜர் பிவி ராமானுஜம் என்பவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது