ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well சொன்ன டிரம்ப்...!

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் வைத்து, இரான் ராணுவப்படை தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் நடத்திக் கொன்றது அமெரிக்கா. அவர், அமெரிக்கர்களைத் துன்புறுத்தியதாகவும் அமெரிக்காவுக்கு எதிராகப் பல சதிகளை நடத்தியதாகவும் சுலைமானியின் கொலைக்குக் காரணம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சுலைமானியின் கொலையினால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரான், இராக் ஆகிய இரு நாடுகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில், கிழக்கு இராக்கில் உள்ள அல்- அசாத் ராணுவத் தளம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த ராணுவத் தளம் அமெரிக்காவுடையது என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ எல்லாம் நன்றாகவே உள்ளது. இராக்கில் உள்ள இரண்டு ராணுவத் தளங்கள்மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிர்ச்சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. உலகிலேயே சக்தி வாய்ந்த மற்றும் சிறந்த ஆயுதங்கள் கொண்ட ராணுவம் எங்களிடம் உள்ளது. இதுகுறித்து நாளை காலை அறிக்கை வெளியிடுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

More News

சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அளித்த ஒருநிமிட பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'தர்பார் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சுலைமானி உடல் அடக்கம்..அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி பறந்த ஈரான் ஏவுகணைகள்..!

ஈராக் இராணுவ தளபதியான சுலைமானியின் இறப்புக்கு காரணமான அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

தலைவர் பேனருக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவணும்.. சேலத்திலிருந்து ரஜினி ரசிகர்.

தர்பார் படத்தின் முதல் நாள் கொண்டாட்டத்தில் ஹெலிகாப்டர் உதவியின் மூலம் ரஜினியின் கட்டவுட்டிற்கு பூ தூவ திட்டமிட்டிருக்கிறார் சேலத்தை சேர்ந்த கனகராஜ். 

முதல்முறையாக யோகிபாபுவின் வித்தியாசமான முயற்சி!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு தற்போது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நடிகர்களின் படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்

10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அரசு  உத்தரவு: அதிர்ச்சி காரணம்

சுமார் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது