close
Choose your channels

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான 4 நாட்களில் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்: என்ன ஆச்சு?

Tuesday, July 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யூடியூப் மூலம் பிரபலமான TTF வாசன் நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று அவர் விபத்தில் சிக்கியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிவேகமாக பைக் ஓட்டி அதை லைவ் வீடியோவாக யூடியூபில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் TTF வாசன். இவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக பலமுறை காவல்துறையினர்களிடம் அபராதம் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சமீபத்தில் TTF வாசன் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய தினம் அவர் நடிக்கும் முதல் திரைப்படமான ’மஞ்சள் வீரன்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஒரு கையில் சூலத்துடன் இன்னொரு கையில் பைக்கில் வீலிங் செய்வது போல் இருந்த அந்த போஸ்டர் இணையத்தில் வைரலானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் TTF வாசன் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னை அமைந்தகரை அருகே TTF வாசன் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கியதாகவும் இதையடுத்து அவர் காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் TTF வாசனுக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment