சன் டிவியுடன் கனெக்சன் ஆனது விஜய் சேதுபதியின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Tuesday,July 07 2020]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூலை 8ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் சற்றுமுன் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் நாளை அதாவது ஜூலை 8ஆம் தேதி 5 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சன் டிவியின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வரும் இந்த படத்திற்கு ’96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சினிமா படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உயிர் போகும் நேரத்திலும் குற்றவாளியின் வண்டி எண்ணை குறித்து வைத்த போலீஸ்

ஹரியானா  மாநிலத்தில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் புலன் விசாரணையில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில் கொல்லப்பட்ட போலீசாரின்

திருமணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன் மணப்பெண் கழுத்தறுத்து கொலை: காதலனின் வெறிச்செயல்

திருமணம் நடக்க இருந்த நான்கு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண் முன்னாள் காதலனால் கழுத்தறுபட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிபிஈ உடையணிந்து நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பிபிஈ உடை வழங்குவது வழக்கமாக உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களை பாதுகாக்க இந்த உடை பெரிதும் உதவியாக இருக்கும்

'குட்டி ஸ்டோரி' பாடலின் 'தல' வெர்ஷன்: இணையத்தில் வைரல்

தல என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு இன்று 39 ஆவது பிறந்தநாள். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை நள்ளிரவு 12 மணி முதல்