சென்னையில் முதல் சுரங்க மெட்ரோ ரயில் தொடங்கியது

  • IndiaGlitz, [Sunday,May 14 2017]

சென்னையில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான 7.4 கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் பயணிகள் சேவை இன்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் இந்த சுரங்கப்பாதையை திறந்து வைத்தனர். இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 45 கி.மீ தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை கடந்தாண்டு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக சின்னமலை- வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மூன்றாம் கட்டமாக திருமங்கலம் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. இந்த ரயில் பாதையில் கீழ்பாக்கம், புது ஆவடி சாலை, ஷெனாய் நகர், அமைந்தகரை, அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த ரயில் பாதை செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் இனிமெல் இந்த பகுதியில் இருந்த போக்குவரத்து நெரிசல் பெருமளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழக மக்கள் தொகையில் 8ல் ஒன்று. விவேகம் செய்த மகத்தான் சாதனை

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'விவேகம்' படத்தின் டீசர் கடந்த 11ஆம் தேதி வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முந்தைய 'கபாலி' சாதனை உள்பட பல சாதனைகளை பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும், லைக்ஸ்களிலும் உடைத்தெறிந்தது...

பாடகி சுசிலீக்ஸ் விவகாரம்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

விஷாலின் 'இரும்புத்திரை' வில்லனாக சர்வதேச பிரபலம்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது விஷால் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்.

ரஜினிக்கு வந்த மிரட்டல் குறித்து தமிழிசை செளந்தரராஜன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ரஜினி 161' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளது.

ரசிகர்களுடன் சந்திப்பு: ரஜினி மன்ற தலைவர் முக்கிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்கவுள்ளார்.