ஒரே நபருடன் உறவு.. ஒரே நேரத்தில் கர்ப்பமாக விரும்பும் இரட்டை சகோதரிகள்..!

  • IndiaGlitz, [Friday,January 27 2023]

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டையர்களான இரு இளம் பெண்கள் ஒரே நபருடன் உறவு கொண்டு ஒரே நேரத்தில் கர்ப்பமாக விரும்புவதாக பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரட்டையர்கள் என்பது பெரும்பாலும் உருவத்தில் ஒற்றுமையாக இருந்தாலும் குணத்தில் சில மாறுபாடு இருக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்த அன்னா மற்றும் லூசி ஆகிய இரட்டை சகோதரிகள் சிறு வயதில் இருந்து ஒரே மாதிரியாக உருவத்தில் மட்டுமின்றி குணத்திலும் உள்ளனர்

இருவரின் தோற்றங்களில் சில மாற்றங்கள் இருந்தாலும் அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருவரும் ஒரே மாதிரியாக மாறி உள்ளனர் என்பதும் அடையாளம் தெரியாதவாறு இருவரும் அச்சு அசலாக ஒரே உருவத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். கழிப்பறை சென்றாலும் குளிக்க சென்றாலும் சாப்பிட சென்றாலும் இருவரும் ஒரே நேரத்தில் தான் செல்வார்களாம். எப்போதுமே இருவரும் ஒரே மாதிரியான உடையை அணிவதால் இருவருக்குள் இருக்கும் வித்தியாசத்தை நெருங்கிய உறவினர்களே கண்டுபிடிப்பது கடினமாக இருக்குமாம்.

இந்த நிலையில் இருவரும் பென் என்ற ஒரே நபரை காதலித்து வருவதாகவும், தற்போது அவர் மூலம் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகவும் ஆசைப்படுகின்றனர் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர். இருவரும் ஒரே நபரை திருமணம் செய்து ஒரே நேரத்தில் உறவு கொண்டு ஒரே நேரத்தில் கருத்தரிக்கவும் விரும்புவதாக பேட்டி அளித்துள்ளனர்.

இதற்காக அவர்கள் செயற்கை கருத்தரித்தல் முறையினை தேர்வு செய்துள்ளதாகவும் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து ஒரே நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் அந்த பேட்டியில் கூறியுள்ளனர். இந்த இரட்டை சகோதரிகளின் பேட்டி வைரலாகி வருகிறது.

More News

எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய்யுடன் பணிபுரிந்த பழம்பெரும் கலைஞர் காலமானார்..!

எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய் என மூன்று தலைமுறை ஹீரோக்குளுடன் பணிபுரிந்த பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் காலமானார். அவருக்கு வயது 93. 

'காந்தாரா டு காஷ்மீர் ஃபைல்ஸ்'.. நடிகை சப்தமி கவுடாவுக்கு கிடைத்த புரமோஷன்!

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் மழை பொழிந்த 'காந்தாரா' திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை சப்தமி கவுடா  பாலிவுட் திரையுலகில் என்ட்ரி ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

'டாட்டூ போடுற இடமா இது? நடிகை யாஷிகாவின் செம கிளாமர் புகைப்படம்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள அவர் தனது பாலோயர்களை திருப்தி செய்வதற்காக

'பொண்ணு ஜாதகம் கிடைக்குமா? பாவாடை தாவணியில் கலக்கும் நடிகை கஸ்தூரி..!

 நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை தாவணியில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளதை அடுத்து 'பொண்ணு ஜாதகம் கிடைக்குமா' என்பது உள்பட ரசிகர்களின் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

'குக் வித் கோமாளி சீசன் 4': 8 குக்குகள் இவர்கள் தான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக நபர்களை கவர்ந்த ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியை கூட ஒரு தடவைக்கு மேல் இரண்டாவது தடவை