close
Choose your channels

'பொண்ணு ஜாதகம் கிடைக்குமா? பாவாடை தாவணியில் கலக்கும் நடிகை கஸ்தூரி..!

Thursday, January 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை தாவணியில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளதை அடுத்து 'பொண்ணு ஜாதகம் கிடைக்குமா’ என்பது உள்பட ரசிகர்களின் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவர் கஸ்தூரி என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. மேலும் அரசியல் கருத்துக்கள், சமூக கருத்துக்கள் என தைரியமாக தனது மனதுக்கு தோன்றும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வார் என்பதும் இவரது கருத்துக்களுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்தாலும் அவர் தனது கருத்துக்களை நிறுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கஸ்தூரிக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகும். சமீபத்தில் அவர் நீச்சல் குளத்தில் எடுத்த வீடியோ ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பாவாடை தாவணியில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக ’பொண்ணு ஜாதகம் கிடைக்குமா? என்று ஒருவர் பதிவு செய்த கமெண்ட்க்கு கஸ்தூரியே ரியாக்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.