வயதோ 105, ஆனாலும் படித்து ஜனாதிபதியிடம் விருது வாங்கும் கேரளா பாட்டிமார்கள்..!

  • IndiaGlitz, [Thursday,March 05 2020]

கேரளாவில், பத்து வயதிலேயே படிப்பு நிறுத்தப்பட பாகீரதி அம்மாள் எனும் மூதாட்டி தனது 105 வது வயதில் படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு தனது 4ம் வகுப்பு தேர்வை 70 சதவிகித மதிப்பெண்ணோடு நிறைவு செய்துள்ளார். இதன மூலம் கேரளாவின் எழுத்தறிவு மிஷனின் வகுப்புக்களில் அதிக வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

அதே போல் கேராளவைச் சேர்ந்த கார்த்தியானி எனும் மூதாட்டி தனது 96 வயதில் பள்ளி படிப்பில் நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியப்படுத்தினார். கடந்த மாதம் 23ம் தேதி மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் பாகீரதி அம்மாளின் படிப்பு ஆர்வத்தைப் பாராட்டி பேசினார்.

இந்த இரு மூதாட்டிகளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் விருது பெற இருக்கின்றனர். மார்ச் 8 ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்சியில் ‘நரி சக்தி புராஸ்கர் 2019’ விருதினை இருவரும் கூட்டாக பெற இருக்கின்றனர்.

More News

“நாம் இருவர் நமக்கு ஆறுபேர்” வெனிசுலா அதிபரின் புதிய அறிவிப்பு

நாம் இருவர் நமக்கு எதற்கு இன்னொருவர்“ என வளரும் நாடுகளில் புது வாசகம் சொல்லப் பட்டு வரும் நிலையில் வெனிசுலாவின் அதிபர் தன் நாட்டுப் பெண்கள் ஒவ்

எனக்கு பெரும் ஏமாற்றம்; மாவட்ட செயலாளர்கள் சந்திப்புக்கு பின் ரஜினி பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

விஜய் நடிக்க வேண்டிய படத்தில் சிம்பு? சுதா கொங்காரா மாஸ்டர் பிளான் 

'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள தளபதி விஜய் அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

கொரோனா வைரஸ் பீதி: கஸ்தூரி படப்பிடிப்பில் பரபரப்பு 

நடிகை கஸ்தூரி நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள ஐடி நிறுவனம் திடீரென கொரொனா வைரஸ் பீதி காரணமாக மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பா ரஞ்சித்-ஆர்யா படத்தில் வில்லனாகும் தமிழ் பட ஹீரோ

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்