close
Choose your channels

விஜய் நடிக்க வேண்டிய படத்தில் சிம்பு? சுதா கொங்காரா மாஸ்டர் பிளான் 

Thursday, March 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள தளபதி விஜய் அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒன்லைன் கதையை கேட்டு ஓகே சொன்ன விஜய், முழு கதையையும் கேட்டதும் அந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் இதனால் ’தளபதி 65’ பட இயக்குனர்களின் பட்டியலில் இருந்து சுதா வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவார் என்றும் அனேகமாக அந்த படம் ’துப்பாக்கி 2’ படமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்புவை சுதா கொங்காரா சந்தித்து விஜய்க்கு கூறிய கதையை அவரிடம் கூறியதாகவும் அந்த கதை சிம்புவுக்கு பிடித்து விட்டதால் உடனே ஓகே சொல்லிவிட்டதாகவும் ’மாநாடு’ படத்தை முடித்தவுடன் சிம்பு-சுதா கொங்காரா இணையும் படம் குறித்த அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு மற்றும் சுதாகொங்காரா ஆகிய இருவரும் பல ஆண்டு கால நண்பர்கள் என்பதும் மணிரத்னம் இயக்கிய ’செக்க சிவந்த வானம்’ படத்தில் சுதா கொங்காரா பரிந்துரையின் பேரில்தான் சிம்பு நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.