close
Choose your channels

'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக 2 நாயகிகள்? அப்ப ரம்யா கிருஷ்ணன் என்ன ஆச்சு?

Sunday, February 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்திற்கு பிறகு ’ஜெயிலர் 2’ உருவாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள் ஒன்றும் அதில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றும் இன்னொருவர் பாலிவுட்டில் இருந்து களமிறங்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ’ஜெயிலர் ’ படத்தில் முதல் பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் என்ன ஆச்சு? என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மனதில் இருந்துள்ளது. ’ஜெயிலர் 2’ படம் உண்மையில் ’ஜெயிலர் ’ படத்தின் இரண்டாம் பாகமா? அல்லது ’ஜெயிலர் 2’ என்ற டைட்டிலில் உருவாகும் வேறு கதையா? என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மனதில் தோன்றியுள்ளது.

ஏற்கனவே ரஜினியுடன் ’சந்திரமுகி’, ‘அண்ணாத்த’, ‘தர்பார்’ உள்ளிட்ட படங்களில் நயன்தாரா நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அவர் ரஜினியுடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment