சென்னை செய்தியாளர்கள் இருவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட உடன் பணிபுரிந்தவர்கள்!

நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வரும் பத்திரிக்கையாளர் ஒருவருக்கும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வரும் உதவி ஆசிரியர் ஒருவருக்கும் என ஒரே நாளில் இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வரும் 24 வயது பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வசித்துவந்த திருவல்லிக்கேணி மேன்ஷன் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக அவருடன் தங்கியிருந்த மூன்று பேர் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளர்கள் ஆக பணிபுரிந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியது.

அதேபோல் ராயபுரத்தில் தங்கியிருந்த தனியார் தொலைக்காட்சி உதவி ஆசிரியர் ஒருவருக்கும் இன்றும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது தந்தைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் அவரது தந்தை காவல்நிலையத்தில் பணிபுரிவதால் அந்த காவல் நிலையம் மூடப்பட்டு அதில் பணிபுரிந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் பணிபுரியும் தனியார் தொலைக்காட்சி பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

விஜயகாந்துக்கு முடிவெட்டி, ஷேவிங் செய்த பிரேமலதா: வைரலாகும் வீடியோ

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், ஊரடங்கு உத்தரவு காரணமாக முடிவெட்டாமல், ஷேவ் செய்யாமல் இருந்ததை அடுத்து அவருடைய மனைவியே அவருக்கு முடிவெட்டி ஷேவ் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அம்மியில் மிளகு அரைத்து ரசம் செய்த பிரபல இயக்குனர்: வைரலாகும் வீடியோ

இந்த கொரோனா விடுமுறையில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரையுலகினர் பலர் விதவிதமான வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்

முகாமி தங்கியிருக்கும் சிறுமியின் பிறந்த நாளை கொண்டாட உதவிய சென்னை மாநகராட்சி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வேலை நிமித்தமாக

ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தைக்கு உதவி செய்த தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மிகவும் எளிமையானவர் என்றும் சாதாரணமானவர்கள் கூட மிக எளிதாக அவரை அணுகும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்

அஜித், சிம்பு படங்களை பார்க்க வேண்டாம்: கெளதம் மேனன் வேண்டுகோள்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' மற்றும் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய இரண்டு படங்களையும் இந்த சூழ்நிலையில் பார்க்க வேண்டாம் என்று இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் வீடியோ ஒன்றில்