இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பா? வெளியான தகவல்!

கொல்கத்தா அணியின் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் சர்மா ஆகியோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளதாகவும் அதையொட்டி இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்தி வைக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் 14 ஆவது சீசனில் 30 ஆம் வது லீக் போட்டி இன்று அகமதாபாத் மையதானத்தில் நடைபெற இருந்தது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற இருந்தது. ஏற்கனவே புள்ளி அட்டவணையில் 3 ஆவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றிப் பெற்று இருந்தால் புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கும்

அதேபோல புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்று இருந்தால் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் சர்மா ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனால் இன்று 7.30 மணி அளவில் நடைபெற இருந்த இன்றைய போட்டி ஒத்தி வைக்கப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடாத நிலையில் போட்டி ஒத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

More News

முதல்வர் பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி வைத்த கோரிக்கை!

வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தாருங்கள் என முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்

வெற்றிக் களிப்பில் வங்கத்துச் சிங்கம் மம்தா பானர்ஜி… மேற்கு வங்கத் தேர்தல்!

மேற்கு வங்கச் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்த பாஜக…கேரளாவில் மீண்டும் தொடரும் ஆட்சி!

கேரளாவின் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.

இன்ஸ்டாகிராமில் பிகினி வீடியோவை வெளியிட்ட திருமணமான இளம் நடிகை!

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண்  18/9' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் மனீஷா யாதவ். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன்

தாங்கள் வைத்துள்ள நம்பிக்கை நிறைவேற்றப்படும்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஸ்டாலின் நன்றி!

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ளது. தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின்