20 லட்சம் ஆண்டுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு… மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் விஞ்ஞானிகள்!!!

  • IndiaGlitz, [Wednesday,November 11 2020]

 

மனித இனம் போல வாழ்ந்த ஒரு இனத்தின் எலும்புக்கூடு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. நவீன மனிதர்கள் இன்று எப்படி இருக்கிறோமோ அதே போல ஒரு இனம் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததற்கான அடையாளமாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நவீன மனிதர்களின் நேரடி மூதாதையர்களான ஹோமோ அராக்கட்டர்ஸ் இனத்தின் சகோதர இனம் இது என்றும் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க பகுதியில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பரோன்த்ரோபஸ் ரோபஸ்டஸ் எனும் மனித இனத்தின் ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்த எலும்புக்கூட்டுக்கு சில பற்களே இருக்கின்றன. இதற்கு முன்பு இதே பகுதியில் ஒரு பல் மட்டும் உள்ள ஒரு இனத்தின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் தென் ஆப்பிரிக்கா பகுதியில் ஒரே காலக்கட்டத்தில் 3 இன மக்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

இந்நிலையில் பரோன்த்ரோபஸ் ரோபஸ்டஸ் மனித இனத்தின் எலும்புக் கூட்டைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இது பரிணாம வளர்ச்சிக் குறித்த ஆய்வில் அடுத்த மைல்கல் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் மனித இனத்தைப் போலவே வாழ்ந்து வந்த இந்த இனம் மிக விரைவிலேயே அழிந்து விட்டதாகவும் அங்கு ஆய்வு மேற்கொண்ட மானுடவியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஒரே காலக்கட்டத்தில் மனித இனத்தின் மூதாதையரான ஹோமோ அராக்கட்டர்ஸ் மற்றும் பரோன்த்ரோபஸ் ரோபஸ்டஸ் இனங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டதை அடுத்து பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வில் புதிய வெளிச்சம் பெற்றுவிட்டதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

More News

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாகுமா மாஸ்டர் டீஸர்?

கடந்த மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களாக திரையுலகமே முடங்கியிருந்த நிலையில் தற்போது தான் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. திரைப்பட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக

பாலாஜியின் திருட்டை கண்டுபிடித்த ரம்யா: சிக்கிய கேப்ரில்லா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் 'பாட்டி சொல்லை தட்டாதே' என்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் பாட்டி அர்ச்சனா வைத்திருக்கும் பத்திரத்தை திருட வேண்டும் என்பது சோம்-ரம்யாவுக்கு

ஆரம்பித்தது மழை: தீபாவளிக்கு பின் மேலும் அதிகரிக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தொடங்கிய நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

ஷங்கரின் மகளுக்கு திருமணமா?

ஹாலிவுட் இயக்குனர்களுக்கு இணையாக பேசப்பட்டு வரும் கோலிவுட் இயக்குனர் ஷங்கர் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் கமலஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' என்ற படத்தை இயக்கி வருகிறார்

6 வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டா கணக்கு: மணிரத்னம் பட நடிகர் ஆவேசம்!

பிரபல மலையாள நடிகரும் மணிரத்தினம் இயக்கிய ராவணன் உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தவருமான நடிகர் பிருத்விராஜ் தனது 6 வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கியுள்ளது