ஆண் நண்பருடன் டிக்டாக்கில் இளம்பெண்: அடித்தே கொலை செய்த கணவன்

  • IndiaGlitz, [Saturday,December 14 2019]

டிக்டாக் செயலி உலகெங்கிலுமுள்ள வாலிபர்களையும் இளம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ள நிலையில் இந்த டிக்டாக்கால் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் பல விபரீதங்கள் ஏற்பட்டு வருகிறது என்பதும் அந்த விபரீதங்கள் கொலையில் கூட முடிந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் டிக் டாக் செய்த இளம் பெண்ணை அவரது கணவர் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் என்ற பகுதியில் மஞ்சு என்ற இளம்பெண் சமீபத்தில் சயிப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவர் தனது சகோதரி மனிஷா என்பவருடன் ஹாஸ்டலில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் மஞ்சுவுக்கு டிக் டாக் வீடியோ மேல் கவனம் விழுந்தது. அவருக்கு டிக் டாக் மூலம் பல ஆண் நண்பர்கள் நட்பாகினர். அவர்களில் ஒரு ஆண் நண்பருடன் இணைந்து ஒரு டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.

இந்த டிக் டாக் வீடியோவை பார்த்து மஞ்சுவின் கணவர் சயிப், கடும் ஆத்திரம் அடைந்து இதுகுறித்து அவரிடம் விசாரிக்க மனுஷா -மஞ்சு தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு சென்றார். அங்கு மஞ்சு-சயிப் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சயிப் அங்கிருந்த தோசைக்கல்லை எடுத்து மஞ்சுவின் தலையில் அடித்தே கொலைசெய்தார். இதை தடுக்க வந்த அவரது சகோதரி மனிஷாவையும் அடித்துக் கொன்றார்

இந்த கொலைக்கு சயிப் நண்பர் முஸ்தபா என்பவர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சிசிடிவி கேமரா மூலம் கொலையாளிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். டிக்டாக் வீடியோவால் இரண்டு இளம்பெண்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

மணிரத்னம் பட நடிகை மீது முறைகேடு புகார்: சிபிஐ விசாரணை

மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' மற்றும் சமீபத்தில் வெளியான 'ஆதித்ய வர்மா' போன்ற படங்களில் நடித்தவர் லீலா சாம்சன். இவர் முன்னாள் சென்சார் அமைப்பின் தலைவரும் ஆவார்.

18 வயது இளைஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் ஐபோன்! ஒரு ஆச்சரிய தகவல்!

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்றால் அதை செல்போன் என்றே கூறலாம். செல்போன் போல் மிகவேகமாக அனைத்து மக்களிடம் போய் சென்றது வேறு எந்தப் பொருளும் இல்லை

சீன மொழியில் வெளியாகிறது த்ரிஷ்யம்..!

ஜீத்து ஜோசப் இயக்கி மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்திருந்த த்ரிஷ்யம் படம் மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியடைந்தது.

உண்மையை சொன்னதற்கு மன்னிப்பு கேட்கனுமா, என் பெயர் ராகுல் "சாவர்க்கர்" இல்லை, ராகுல் "காந்தி"..!

"நாட்டில் நடந்து கொண்டிருக்கும் உண்மைகளைச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. என் பெயர் ராகுல் சாவர்க்கர் இல்லை ராகுல் காந்தி" என்று இன்று மோடி ஆட்சிக்கு எதிராக

சென்னை நபரை வலைவீசி தேடும் சச்சின்: தமிழில் பதிவு செய்த டுவீட்

சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்புவதாகவும் அவரை கண்டுபிடிக்க தனக்கு உதவி செய்யும்படியும் சச்சின் டெண்டுல்கர் தமிழில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளது