'தல 57' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Wednesday,October 26 2016]

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ஸ்டைலிஷ் த்ரில்லர் படமான 'தல 57' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் நடந்த ஐரோப்பிய படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குனராக இந்த படத்தில் பணியாற்றிய நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஐதராபாத் படப்பிடிப்பில் நடைபெறும் ஆக்சன் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் கணேஷ் இயக்கி வருகிறார்.
ஸ்டண்ட் இயக்குனர் கணேஷ் ஏற்கனவே இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளிவந்த 'சிறுத்தை' மற்றும் 'வீரம்' படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'தல 57' படத்தின் வில்லன் விவேக் ஓபராய் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையில் சிவா இயக்கி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

More News

வடிவேலுவின் அதிரடி வில்லன் அவதாரம்

ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள 'கடவுள் இருக்குறான் குமார்' மற்றும் 'புரூஸ்லீ' ஆகிய படங்கள் அடுத்த மாதம் வெளியாகவுள்ள...

விஜய்சேதுபதியின் 'கவண்' படத்தின் மெயின் வில்லன் குறித்த தகவல்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடித்து வரும் 'கவண்' ...

அஜித்தை நடிக்க வைக்க சிபாரிசு செய்தேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அஜித் நடித்த முதல்படம் அமராவதி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். முதல் படம் நல்ல வெற்றியை...

அருள்நிதிக்கு கிடைத்த மிகப்பெரிய புரமோஷன்

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு அவர்களின் மகனுமான அருள்நிதி 'வம்சம்' படத்தில்...

'பாகுபலி 2' ஆடியோ உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்...