close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'கவண்' படத்தின் மெயின் வில்லன் குறித்த தகவல்

Tuesday, October 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடித்து வரும் 'கவண்' படத்தின் வில்லன் யார் என்ற தகவல் இன்னும் வெளிவராத நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் இணைந்த பாலிவுட் நடிகரும் 'அயன்' படத்தின் வில்லனுமான அக்சயதீப் சைகல் வில்லன் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி திரைப்பட மற்றும் டெலிவிஷன் நடிகர் போஸ் வெங்கட்தான் மெயின் வில்லன் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் போஸ் வெங்கட் 55 வயது அரசியல்வாதியாக நடித்துள்ளதாகவும் இந்த படத்திற்காக உடல் எடையை அதிகரித்ததோடு, மொட்டையும் அடித்துள்ளதாகவும் படக்குழுவினர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
போஸ் வெங்கட் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், டி.ராஜேந்தருடன் மட்டும் இணைந்து சுமார் 30 காட்சிகளில் அவர் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைநகரம், சிவாஜி, சரோஜா, சிங்கம், கோ உள்பட பல படங்களில் நடித்துள்ள போஸ் வெங்கட்டுக்கு இந்த படமும் அவருடைய திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.