கவின் அடுத்த படத்தில் 2 இளம் நாயகிகள்.. டைட்டில் இதுதானா?

  • IndiaGlitz, [Monday,August 07 2023]

நடிகர் கவின் நடித்த ’டாடா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தை இயக்குனர் இளன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளாக நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ஒருவர் ’லவ் டுடே’ நாயகி இவானா, இன்னொருவர் ’பேச்சுலர்’ நாயகி திவ்யபாரதி என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் ’ஸ்டார்’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.



இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே இளன் இயக்கிய ‘பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த மேலும் சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் களைகட்டும் மதுரை.. 'லியோ' இசை வெளியீட்டு தேதி இதுவா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்  

கடைசியில் நீங்களுமா..? நடிகை காயத்ரி சங்கரின் பிகினி புகைப்படங்களுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை காயத்ரி சங்கர் சமீபத்தில் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த நிலையில் தற்போது அங்கிருந்து அவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

பிரபலத்தின் இரட்டை குழந்தைகளுடன் விளையாடும் சமந்தா.. 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ரியாக்சன்..!

பிரபல பின்னணி பாடகி சின்மயி அவர்களுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த குழந்தைகளுடன் சமந்தா விளையாடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' : ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் வசூலும் திருப்திகரமாக இருந்ததாக

'அங்காடி தெரு' நடிகை காலமானார்.. மார்பக புற்றுநோய் காரணமா?

வசந்தபாலன் இயக்கத்தில் உருவான 'அங்காடி தெரு' என்ற திரைப்படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்த நடிகை சிந்து காலமானார். அவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி