close
Choose your channels

கவின் அடுத்த படத்தில் 2 இளம் நாயகிகள்.. டைட்டில் இதுதானா?

Monday, August 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கவின் நடித்த ’டாடா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தை இயக்குனர் இளன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளாக நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ஒருவர் ’லவ் டுடே’ நாயகி இவானா, இன்னொருவர் ’பேச்சுலர்’ நாயகி திவ்யபாரதி என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் ’ஸ்டார்’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.



இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே இளன் இயக்கிய ‘பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த மேலும் சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.