சமந்தாவின் 'யூடர்ன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Friday,September 07 2018]

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வரும் முன்னணி நடிகையான சமந்தா நடித்த 'சீமராஜா' மற்றும் 'யூடர்ன்' ஆகிய இரண்டு படங்கள் ஒரே நாளில் அதாவது வரும் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

சீமராஜா' படத்தின் புரமோஷனில் இருந்தே அந்த படம் வெற்றிப்படம் என உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது 'யூடர்ன்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமான 'யூடர்ன்' திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பிற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 128 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் எட்டு நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைமை கொண்டுள்ளது.

சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பவன்குமார் இயக்கியுள்ளார். பூமசந்திர தேஜஸ்வா இசையில் நிகேத் பொமி ஒளிப்பதிவில் சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

'சாமி 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சாமி 2' திரைப்படம் செப்டம்பர் ரிலீஸ் என கடந்த சில நாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு வரும்

இன்னிக்கு 'பேட்ட' நாளைக்கு 'கோட்டை': வைரலாகும் டுவீட்டுக்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் 'பேட்ட' என்று சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 165வது படத்தின் மாஸ் டைட்டில் இதோ

அதன்படி சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படத்தின் மாஸ் டைட்டில் 'பேட்ட' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி ரசிகர்களுக்கு ஒரே நாளில் டபுள் விருந்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'ரஜினி 165' படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளதால்

'தலைவர் 165' படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தலைவர் 165' படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது