சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு உதயநிதி செய்த நிதியுதவி

  • IndiaGlitz, [Tuesday,April 14 2020]

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்திருந்த நிலையில் தற்போது மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 21 நாட்களில் திரைப்பட படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை என்பதால் பெப்சி அமைப்பை சேர்ந்த சினிமா தொழிலாளர்கள் மிகவும் திண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு உதவும் வகையில் பிரபல நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் உதவி செய்தனர். இதனை அடுத்து பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி குவிந்தது என்பது தெரிந்ததே.

அதேபோல நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்களுக்கும் பல முன்னணி நடிகர் நடிகைகளும் உதவி செய்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திரைப்படத் துறையில் உள்ள நடிகர் நடிகைகள் போலவே சின்ன துறையில் உள்ள பல நடிகர்களும் கஷ்டப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று பல நடிகர்கள் பணமாகவும் மளிகை பொருட்களாகவும் சின்னத்திரை நடிகர் நடிகர்களுக்கு உதவி செய்தனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் ரூபாய் நிதியுதவியை சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு வழங்கியுள்ளார். இதனையடுத்து சின்னத்திரை கலைஞர்கள் உதயநிதிக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

More News

இதுவும் கடந்து போகும்: ரஜினியின் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் கொரோனா வைரஸ் பீதியையும் தாண்டி தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் தமிழ்ப்புத்தாண்டு

மாண்ட மருத்துவருக்கு சிதை நெருப்பு தர மனமில்லையா? சீனுராமசாமி ஆவேச கவிதை

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மருத்துவர் ஒருவரை தகனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என நேற்று முதல் அம்பத்தூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

தமிழ்ப்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்!

இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அம்பேத்கர் பிறந்த நாளையும் கொண்டாடி வரும் நிலையில் நடிகரும்

சென்னை ராயபுரத்தில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு: மற்ற இடங்களில் எப்படி?

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகவும், இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1173

என்னால்‌ முடிந்தவரை உதவி வருகிறேன்: ராகவா லாரன்ஸின் தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு!

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூபாய் 3 கோடி அளித்திருந்த நிலையில் மேலும் பலர் தன்னிடம் தொலைபேசி