'வாரிசு' எங்களிடம் இல்லை என்றாலும் விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்: உதயநிதி

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை நாங்கள் வாங்கவில்லை என்றாலும் விஜய் அண்ணாவுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று ’கலகத்தலைவன்’ சிறப்பு காட்சியில் போது கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ’அஜித்தின் ’துணிவு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மட்டுமே நாங்கள் பெற்றுள்ளோம் என்றும் இந்த படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை என்றாலும் இந்த படம் மிகச் சிறப்பாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் பொங்கல் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறோம் என்றும் கூறினார்.

அதேபோல் ’வாரிசு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை நாங்கள் வாங்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அந்த படம் வெற்றி அடைய விஜய் மற்றும் படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

விஜய்யின் ’வாரிசு’ மற்றும் அஜீத்தின் ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பது இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இரண்டு படங்களும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது என திரையுலகினர் கூறுகின்றனர்.

More News

டேஞ்சர் ஜோனில் இருக்கும் நால்வர்: இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே .

பிறந்த நாள் வாழ்த்துக்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா....!

திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் மிகவும் பெருமைக்குரியது என்பதும் ரசிகர்களால் அழைக்கப்படும் இந்த பட்டம் ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டு வந்தது. 

சூடேற்றிய அசீம்.. ஆவேசமான ஏடிகே.. இன்னிக்கு செம எண்டர்டெயின்மெண்ட் இருக்கு!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இந்த 40 நாட்களில் ஒரு சில நாட்கள் தவிர தினந்தோறும் அசீம் ஒரு சக போட்டியாளர் உடன் சண்டை போட்டு வருகிறார்.

'வணங்கான்' பிரச்சனை குறித்து மனம் திறந்த பாலா.. என்ன சொன்னார் தெரியுமா?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'வணங்கான்'. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடைபெற்ற

'கலகத்தலைவன்' டைட்டிலுக்கு இதுதான் அர்த்தம்: மகிழ்திருமேனி

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான 'கலகத்தலைவன்'  திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள்