முடிவுக்கு வந்தது உதயநிதியின் 'மனிதன்

  • IndiaGlitz, [Tuesday,March 01 2016]

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான உதயநிதியின் 'கெத்து' படத்திற்கு பின்னர் அவர் நடித்து வந்த அடுத்த படமான 'மனிதன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.


'என்றென்றும் புன்னகை' பட இயக்குனர் அஹ்மத் இயக்கியுள்ள இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி படத்தில் முதல்முறையாக ஒரு முக்கிய வேடத்தில் காமெடி நடிகர் விவேக் நடித்துள்ளார். அதேபோல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக உதயநிதியுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஒருகல் ஒருகண்ணாடி' படத்திற்கு பின்னர் ஹன்சிகா மீண்டும் உதயநிதியுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றொரு கதாநாயகியாகவும், பிரகாஷ்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

'மனிதன்' திரைப்படம் முடிவடைந்ததை அடுத்து உதயநிதி, சுசீந்திரன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஷ்ணுவிஷால், மஞ்சிமாமோகன், ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

புலி, வேதாளம் படங்களை அடுத்து S3' படத்தில் ஸ்ருதி பாடுகிறாரா?

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் ஜொலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே....

தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினியை கடந்த பல வருடங்களாக அரசியலில் இழுக்க பல கட்சிகள் முயற்சி செய்து வந்தபோதிலும்...

ஷாருக்கானுடன் 5வது முறையாக மோதும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும்...

'தெறி', 'கபாலி' படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல்?

கோலிவுட் திரையுலகில் தயாரான படங்களில் தமிழில் பெயர் வைத்த படங்கள் மற்றும் 'U'சர்டிபிகேட் பெற்ற படங்களை தேர்வு செய்து தமிழக அரசு 30%...

கபாலி' கட்டிங் பணிகள் ஆரம்பம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டக்கத்தி இயக்குனர் பா.ரஞ்சித் இயகக்த்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த 'கபாலி'...