close
Choose your channels

முடிவுக்கு வந்தது உதயநிதியின் 'மனிதன்

Tuesday, March 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான உதயநிதியின் 'கெத்து' படத்திற்கு பின்னர் அவர் நடித்து வந்த அடுத்த படமான 'மனிதன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.


'என்றென்றும் புன்னகை' பட இயக்குனர் அஹ்மத் இயக்கியுள்ள இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி படத்தில் முதல்முறையாக ஒரு முக்கிய வேடத்தில் காமெடி நடிகர் விவேக் நடித்துள்ளார். அதேபோல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக உதயநிதியுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஒருகல் ஒருகண்ணாடி' படத்திற்கு பின்னர் ஹன்சிகா மீண்டும் உதயநிதியுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றொரு கதாநாயகியாகவும், பிரகாஷ்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

'மனிதன்' திரைப்படம் முடிவடைந்ததை அடுத்து உதயநிதி, சுசீந்திரன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஷ்ணுவிஷால், மஞ்சிமாமோகன், ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.