மனிதனுக்கு வரிவிலக்கு மறுப்பு. உதயநிதியின் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Saturday,April 30 2016]
கடந்த பொங்கல் தினத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' படத்திற்கு வரிவிலக்கு தர தமிழக அரசு மறுத்ததும், இதற்காக உதயநிதி பதிவு செய்த வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒரு வழக்கை அதே காரணத்திற்காக பதிவு செய்யவுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த 'மனிதன் 'திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இந்த படத்திற்கு வரிவிலக்கு தர தமிழக அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். மனிதன் என்பது தமிழ்ச்சொல் இல்லை என்றும் மாந்தர், மாந்தன் என்பதே தமிழ் சொற்கள் என்றும் அவர்கள் இதற்கு விளக்கம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் 'மனிதன்' படத்திற்கு வரிவிலக்கு கேட்டு வரும் திங்கள் அன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த வழக்குகள் வெற்றி பெறுமா அல்லது தோல்வி பெறுமா என்பது குறித்து தனக்கு கவலை இல்லை என்றும், இருப்பினும் தனது போராட்டம் தொடரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More News

'விஜய் 60' படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'விஜய் 60'...

'கபாலி' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம். எஸ்.தாணு அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அட்டக்கத்தி' பா.ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணுவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'கபாலி'...

பாபிசிம்ஹா படத்திற்கு சென்சார் போட்ட முட்டுக்கட்டை

பாபிசிம்ஹா நடித்த 'கோ 2' வரும் மே 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடித்த மற்றொரு படமான 'மெட்ரோ' படத்தின் ...

விஜய்யின் 'தெறி'யை பின்பற்றிய சூர்யாவின் '24'

சூர்யா மூன்று வேடங்களில் நடித்துள்ள '24' திரைப்படம் வரும் மே 6-ல் பிரமாண்டமாக உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது...

'சபாஷ் நாயுடு' படத்தில் கமலின் இன்னொரு குடும்ப உறுப்பினர்

உலக நாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தின் தொடக்கவிழா இன்று காலை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் சிறப்பாக நடைபெற்றது...