ஆரஞ்சு மிட்டாய்' நடிகருக்கு கிடைத்த நண்பர்கள்

  • IndiaGlitz, [Sunday,April 17 2016]

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஷ்ணுவிஷால் நண்பர்களாக நடிக்கவுள்ளனர் என்பதும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மூன்று நண்பர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பே இந்த படம் என்று கூறப்படும் நிலையில் உதயநிதி, விஷ்ணுவுடன் மூன்றாவது நண்பராக நடிக்க ரமேஷ் திலக் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய்சேதுபதியின் 'ஆரஞ்சுமிட்டாய்' படத்திற்கு பின்னர் ரமேஷ் திலக்கிற்கு கிடைத்த முக்கிய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரமேஷ் திலக் ஒரு பட்டதாரியாகவும், இளைய சமுதாயத்தின் பிரதிநிதியாகவும் நடிக்கின்றார். இந்த படம் அவருக்கு பெரிய திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதேபோன்று இன்னொரு படத்திலும் மூன்று நண்பர்களில் ஒருவராக ரமேஷ் திலக் நடிக்கவுள்ளார். இவருடன் மற்ற நண்பர்களாக இனிகோ பிரபாகரன் மற்றும் யோகிபாபு நடிக்கவுள்ளனர்.

More News

'வாஹா' டிராக்லிஸ்ட் வெளியீடு

விக்ரம்பிரபு, ரான்யாராய் நடிப்பில் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியுள்ள 'வாஹா' திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிராக் லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது....

கமலுடன் முதல்முறையாக இணையும் இயக்குனர் மகேந்திரன்

'கும்கி' முதல் 'இது என்ன மாயம்' வரை பல வெற்றி படங்களில் நடித்த சிவாஜிகணேசன் குடும்பத்தின் வாரிசு நடிகர் விக்ரம்பிரபு நடித்து வரும் அடுத்த படமான 'வாஹா' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவுள்ளது....

சீயான் விக்ரம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு கேரக்டருக்காக தன்னையே அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகர் சீயான் விக்ரம் என்றால் அது மிகையாகாது. எந்தவித திரையுலக பின்புலமும் இல்லாமல் தன்னுடைய உழைப்பால் படிப்படியாக முன்னேறிய விக்ரம் இன்று அரைசதம் அடித்துள்ளார்....

சூப்பர் ஹிட் இயக்குனருடன் முதன்முதலாக இணையும் அனிருத்

ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களுடனும் ஆரி, விஜய்சேதுபதி போன்ற இளையதலைமுறை நடிகர்களுடன் நடித்து வரும் கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அடுத்து சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை 'தனி ஒருவன்' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜெயம் ராஜா இயக்கவுள்ளார் என்பதையும் ஏற

அஜித்துடன் கனெக்ஷன் ஆகும் சிம்புவின் அடுத்த படம்

'தல அஜித்தின் பிறந்த நாள் வரும் மே மாதம் 1ஆம் தேதி வரவுள்ள நிலையில் இப்போதே அவரது ரசிகர்கள் அட்வான்ஸாக அஜித் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்....