close
Choose your channels

ஆரஞ்சு மிட்டாய்' நடிகருக்கு கிடைத்த நண்பர்கள்

Sunday, April 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஷ்ணுவிஷால் நண்பர்களாக நடிக்கவுள்ளனர் என்பதும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மூன்று நண்பர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பே இந்த படம் என்று கூறப்படும் நிலையில் உதயநிதி, விஷ்ணுவுடன் மூன்றாவது நண்பராக நடிக்க ரமேஷ் திலக் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய்சேதுபதியின் 'ஆரஞ்சுமிட்டாய்' படத்திற்கு பின்னர் ரமேஷ் திலக்கிற்கு கிடைத்த முக்கிய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ரமேஷ் திலக் ஒரு பட்டதாரியாகவும், இளைய சமுதாயத்தின் பிரதிநிதியாகவும் நடிக்கின்றார். இந்த படம் அவருக்கு பெரிய திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதேபோன்று இன்னொரு படத்திலும் மூன்று நண்பர்களில் ஒருவராக ரமேஷ் திலக் நடிக்கவுள்ளார். இவருடன் மற்ற நண்பர்களாக இனிகோ பிரபாகரன் மற்றும் யோகிபாபு நடிக்கவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.