சிறை கைதிகளைத் திடீரென விடுவிக்கும் உக்ரைன் அதிபர்… என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,March 01 2022]

போர் அனுபவம் கொண்ட உக்ரைன் நாட்டு சிறைகைதிகள் தற்போது நடந்துவரும் போரில் கலந்துகொண்டு ரஷ்யாவிற்கு எதிராகப் போராட விரும்பினால் அவர்களுக்கு விடுதலை அளிக்கப்படும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே குறைந்த ஆயுதப்படைகளை மட்டுமே கொண்டிருக்கும் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு 18 ஆயிரம் துப்பாக்கிகளை வழங்கி ரஷ்ய இராணுவத்தை எதிர்த்துப் போராடும்படி அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் பலரும் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் ரஷ்ய படைகளை எதிர்த்துப் போராட விரும்பும் போர் அனுபவம் கொண்ட சிறை கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்படும் என்று ஜெலன்ஸ்கி அறிவித்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சிறைகைதிகள் டெனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளுக்கு அனுப்பப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்யா அதிபர் புடின் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் உள்ள இரண்டு மாகாணங்களை தனி மக்கள் குடியரசு நாடாக அறிவித்து இருந்தார். உக்ரைன் நாட்டிற்குச் சொந்தமான இந்தப் பகுதிகளில் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் ரஷ்யாவிற்கு ஆரவான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதிகளை விடுவிக்கும் முயற்சிகளுக்காகத்தான் உக்ரைன் தற்போது நேட்டாவின் ஆதரவை நாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஒரு காரில் 91 நாடுகளை சுற்றிவந்த இளம் தம்பதி… வியக்க வைக்கும் தகவல்!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி கடந்த 12 ஆண்டுகளாக

போரில் வீட்டைப் பறிக்கொடுத்த பெண்மணி செய்த காரியம்… மனதை உருக்கும் வீடியோ!

உக்ரைன் நாட்டில் 5 ஆவது நாளாக ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக்கி இருக்கிறது. நேற்று கார்கிவ் பகுதியில்

எனக்கு நாடுதான் முக்கியம்… கையில் துப்பாக்கியை ஏந்திய மிஸ் உக்ரைன் அழகி!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 5 ஆவது நாளாக போர் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன்

மனிதம் வென்ற இடம்… உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யா மக்கள் செய்த காரியம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்களே மாஸ்கோ நகரில் நேற்று

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படக்காட்சிகள் லீக் ஆகிவிட்டதா? அதிர்ச்சி தகவல்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட