உங்க ரெண்டு பேருக்கும் வயசே ஆகாதா..? 'ஜவான்' பாடலுக்கு செம்ம நடனமாடும் நட்சத்திர ஜோடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியாகிய ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த சூப்பர் ஹிட் படமான ‘ஜவான்’ படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடிகை உமா ரியாஸ்கான் தனது கணவருடன் செம ஆட்டம் ஆடிய நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ்கான் ஆகிய இருவரும் தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார்கள் என்பது தெரிந்ததே. இவர்களது மகன் ஷாரிக் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உமா ரியாஸ்கான் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் பலர் அறிந்ததே.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் ‘ஜவான்’ பாடலுக்கு தனது கணவர் ரியாஸ்கானுடன் இணைந்து செம நடனமாடி உள்ள வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகிறது. உங்க ரெண்டு பேருக்கும் வயசே ஆகாதா போன்ற கமெண்ட் உள்பட பலவிதமான கமெண்ட்கள் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments