அன்னையர் தினத்தில் ஒரு அன்பான பெண் போலீஸ்

  • IndiaGlitz, [Friday,May 10 2019]

உலகம் முழுவதும் அன்னையர் தினம் வரும் ஞாயிறு அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் தாயுள்ளத்தோடு நடந்து கொண்ட செய்தி இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

உபி மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் கைக்குழந்தையுடன் தனது உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் குழந்தைக்கு பால் கூட வாங்கி கொடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். குழந்தை பசியால் அழுததால் வேறு வழியின்றி குழந்தைக்கு தண்ணீர் மட்டும் கொடுத்துள்ளார்.

இதனை அந்த பக்கமாக சென்ற பெண் போலீஸ் கான்ஸ்டபிள் வர்ஷா என்பவர் பார்த்து, உடனே அந்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் உணவு வாங்கி கொடுத்ததோடு, செலவுக்கு பணமும் கொடுத்துள்ளார். மேலும் தனது மொபைல் எண்ணை கொடுத்து பத்திரமாக வீடுபோய் சேர்ந்ததும் தனக்கு போன் செய்து தகவல் அளிக்குமாறும் தெரிவித்துள்ளார். பெண் போலீஸ் வர்ஷாவின் இந்த தாயுள்ளம் குறித்த செய்தியும் புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

'இந்தியன் 2'வுக்கு பதிலாக 'தேவர் மகன் 2': கமல்ஹாசனின் மெகா திட்டம்

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருந்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முதல்கட்ட படப்ப்பிடிப்புடன் நின்றுவிட்டது

சின்மயி கோரிக்கையை தள்ளுபடி செய்த சென்னை காவல்துறை!

தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை உச்சநீதிமன்றம் உரிய முறையில் விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி பின்னணி பாடகி சின்மயி

என் படத்தையும் பாருங்க! தியேட்டர் வாசலில் கெஞ்சிய தயாரிப்பாளர்

ஒவ்வொரு வெள்ளியன்றும் நான்கு அல்லது ஐந்து படங்கள் வெளியானபோதிலும், டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டும் பார்த்துவிட்டு

'பிக்பாஸ்3'யில் நான் இல்லை: பிரபல நகைச்சுவை நடிகர் விளக்கம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஜூன் மாதம் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பப்படவுள்ளது.

என் பாடல்களில் ஆபாசமா? புஷ்பவனம் குப்புசாமிக்கு செந்தில் பதிலடி!

ஒரே துறையில் பிரபலமாக இருப்பவர்களிடையே போட்டியும் பொறாமையும் ஏற்படுவது உலகம் முழுவதும் உள்ள ஒரு வழக்கமான நிலை ஆகும்.