அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு முறை பயணமாக இந்தியா வருகை

  • IndiaGlitz, [Wednesday,February 12 2020]

 

 

உலகில் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் அரசு முறை பயணமாக பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை திங்கட் கிழமை அன்று உறுதி செய்தது.

கடந்த செப்டம்பரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்குச் சென்ற போது இந்தியாவிற்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட அதிபர் ட்ரம்ப் தற்போது இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த பயணத்தில் புதுடெல்லி மற்றும் குஜராத் பகுதிகளுக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதிபர் ட்ரம்ப் உடன் அவரது மனைவி மெலினா ட்ரம்ப்பும் வருகை தர இருக்கிறார்.

கடந்த ஆண்டில் உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடுகளாக சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் கடும் வர்த்தகப் போரில் ஈடுபட்டன. அதே நாட்களில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிகப் படியான இறக்குமதி வரியை விதிக்கிறது எனக் குற்றம் சாட்டி இருந்தார். அதனையொட்டி இந்தியா சில பொருட்களுக்கு குறைந்த அளவில் வரியினை குறைத்துக் கொண்டிருக்கிறது. மேலும், அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கி வந்த சிறப்பு பொருளாதார விதிமுறைகளை தடை செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நேரத்தில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவில், வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப் அமெரிக்க வாழ் இந்தியவர்களை ஈர்க்கும் விதமாகவே இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தியா – அமெரிக்கா இறக்குமதி பொருட்கள் மீதான வரி குறைப்பு பற்றி பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என்றும் இதில் மாற்றங்கள் வரும் என்றும் எதிர்ப் பார்ப்புகள் எழுந்துள்ளன. மேலும், வாஷிங்டனில் இருந்து வெளியான செய்தி அறிக்கையில், இந்தியா 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீடில் 24 MH-60R SEAHAWK ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளது என தெரிய வருகிறது. எனவே இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகும் என எதிர்ப் பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்களை வாங்குவதை 2007 இல் இருந்து நிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத் தக்கது. அமெரிக்கா – சீனா வர்த்தப் போர் நீடிக்கும் தருவாயில் இந்தியா அமெரிக்காவிடம் பாதுகாப்பு கருவிகள் வாங்குவது குறித்து அமெரிக்காவுடன் மேலும் நட்புணர்வை வலுப்படுத்தும் எனவும் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்கிற ரீதியில் பல முறை அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்து இருந்தார். செய்தியாளர்கள் பிரதமர் மோடியிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, “காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாவது நாட்டையும் அனுமதிப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் இரு நாடுகள் மட்டும் கலந்தாலோசித்து முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார்.

தற்போது காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப் பட்ட நிலையில் இது குறித்து அதிபர் ட்ரம்ப் பேசுவாரா அல்லது தனது கருத்தைத் தெரிவிப்பாரா என்கிற நோக்கில் எதிர்ப்பார்ப்புகளும் எழுந்துள்ளன. ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக் கொண்ட பின்பு முதல் முறையாக இந்தியா வருகிறார் என்பதும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

More News

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்தஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர்

மின் கோபுரங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துமா??? தமிழகத்தில் தொடரும் எதிர்ப்புகள் ஏன்???

தமிழகத்தில் உயர் மின் கோபுரங்களை அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்

நித்யானந்தாவுடன் கனெக்சன் ஆகும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாமியார் நித்யானந்தா சமீபத்தில் தலைமறைவாகியுள்ளார் என்பதும் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளது என்பதும் தெரிந்ததே 

இனி கொரோனா வைரஸ் -  COVID-19 என அழைக்கப்படும் – உலகச் சுகாதார நிறுவனம் அறிவிப்பு

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா நாவல் வைரஸ் (Novel corona - nCov) என்றே இதுவரை சொல்லப் பட்டு வந்தது

நடுவானில் சூரரைப்போற்று இசை வெளியீடு: கலந்து கொள்ளும் 100 பிரபலங்கள் யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீடு நாளை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நடுவானில் நடைபெற உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்