இன்று மாலை மணிரத்னம் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு ரூபாய் 500 கோடிக்கு மேல் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடக்கும் இந்த படத்தில் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிய உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தாய்லாந்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மணிரத்தினம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இன்னொரு திரைப்படமான 'வானம் கொட்டட்டும்' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனாசேகரன் என்பவர் இயக்கி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஜோடியாக நடித்து வருகின்றனர். சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் நீண்ட இடைவேளைக்குப் பின் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் மடோனா செபாஸ்டியன், நிவேதாதுரைராஜ், சாந்தனு பாக்கியராஜ், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து வருகின்றனர் ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவில், சங்கத்தமிழன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் 'வானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

பாலியல் குற்றவாளிகளுடன் உறவாடலாமா? கமல்ஹாசனுக்கு சின்மயி கேள்வி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல பாடகி சின்மயி. சின்மயியின்

பிரபல நடிகரின் மகன் வாங்கிய இரண்டு தங்க மெடல்கள்

கோலிவுட் நடிகர்கள் ஒருபக்கம் நடிப்பில் சாதனை செய்து வரும் நிலையில் அவர்களது வாரிசுகள் பல்வேறு துறைகளில் சாதனை செய்து பதக்கங்கள் குவித்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

பாரதிராஜாவுடன் காலை உணவை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த 6 ஆண்டுகளாக திரைப்படங்கள் எதையும் ஏற்கவில்லை என்றாலும் அவ்வப்போது ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

டி.என்.சேஷன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் 10வது தலைமை தேர்தல் ஆணையராக கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை பதவி வகித்து தேர்தலில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்து

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல்நலக் குறைவால் சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 87