close
Choose your channels

'வாத்தி' இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலம் தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Sunday, May 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’வாத்தி’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது என்பதும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

’வாத்தி’ படம் 100 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை செய்த நிலையில் தற்போது இந்த படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெங்கி அட்லுரி இயக்கும் அடுத்த திரைப்படத்தின் நாயகனாக பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ’வாத்தி’ படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் ’வாத்தி’ படம் போலவே தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment