நிறைவேறாமல் போன வடிவேல் பாலாஜியின் கடைசி ஆசை: நண்பர் உருக்கம்

  • IndiaGlitz, [Friday,September 11 2020]

பிரபல சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று காலமான செய்தி சின்னத்திரை மற்றும் பெரியதிரை நட்சத்திரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் தற்போது அவருடைய நெருங்கிய நண்பர் அமுதவாணன் என்பவர் வடிவேல் பாலாஜியின் கடைசி ஆசை நிறைவேறாமலே போய்விட்டது என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘வடிவேல் பாலாஜியின் மறைவு எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் குறித்து யோசித்தாலே மிகவும் படபடப்பாக இருக்கிறது. ’அது இது எது’ நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் செய்ய வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.

அது மட்டுமின்றி வடிவேல் பாலாஜி தன்னுடைய மனைவியுடன் கலந்துகொள்ளும் 'Mr&Mrs சின்னத்திரை' என்ற நிகழ்ச்சியை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருடைய இந்த ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது என்று வேதனையுடன் அமுதவாணன் கூறியுள்ளார். இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்

சின்னத்திரையில் மட்டுமின்றி பெரிய திரையிலும் மிகப்பெரிய அளவில் வளர வேண்டிய ஒரு கலைஞர், இளம் வயதிலேயே மரணம் அடைந்துவிட்டது அவரது குடும்பத்தினர்களுக்கு மட்டுமின்றி திரையுலகிற்கே ஒரு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது

More News

வடிவேல் பாலாஜியை அடுத்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தேன்: பிரபல இயக்குனர் 

பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று திடீரென உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி சின்னத்திரை ரசிகர்களை மட்டுமின்றி பெரிய திரை நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு தமிழ் நடிகை? பரபரப்பு தகவல் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான இது குறித்த இரண்டு புரமோ வீடியோக்களும் மிகப்பெரிய வரவேற்பை

வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு நிதியுதவி செய்த பிரபல தமிழ் நடிகர்!

பிரபல தொலைக்காட்சி காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று திடீரென மரணம் அடைந்தது திரை உலகையே அதிர வைத்தது என்பது தெரிந்ததே. கடந்த 15 நாட்களாக உடல் நலம் இல்லாமல்

நயன்தாரா பட வில்லனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அமலாபால்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த படம் ஒன்றில் வில்லனாக நடித்த நடிகருக்கு நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் 

கழுத்தில் கரன்சி மாலை, வீட்டில் குபேர பூஜை: வைரலாகும் வனிதா-பீட்டர்பால் புகைப்படம்

கடந்த சில நாட்களாகவே ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வந்த வனிதா விஜயகுமார் தற்போது கழுத்தில் கரன்ஸி மாலையுடன் கூடிய புகைப்படம்