close
Choose your channels

'சந்திரமுகி 2' படத்தின் முக்கிய அப்டேட்.. சூப்பர் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

Thursday, July 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

முதல் கட்டமாக வடிவேலு, தனது பகுதியின் காட்சிகளின் டப்பிங் பணியை தொடங்கி உள்ளார். இது குறித்த வீடியோ பட குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது

‘சந்திரமுகி’ முதல் பாகத்தில் முருகேசன் என்ற கேரக்டரில் வடிவேலு நடித்திருந்த நிலையில் அதே கேரக்டரில் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. வடிவேலுவை அடுத்து இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நட்சத்திரங்கள் தங்கள் டப்பிங் பணியை தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் லட்சுமி மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், ஆர் ஜி ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பி வாசு இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.