'வாரிசு',  'துணிவு' பொங்கலுக்கு முதலில் எந்த படம் பார்ப்பீங்க? -வடிவேலு பதில்!

  • IndiaGlitz, [Saturday,December 24 2022]

விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் நாளில் வெளியாக இருப்பதை அடுத்து இந்த இரண்டு படங்களையும் பார்க்க விஜய், அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். 

ஆனால் நடுநிலை ரசிகர்கள் எந்த படத்தை முதலில் பார்ப்பது என்ற குழப்பத்தில் இருந்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பது என்ற கேள்வியை பெரும்பாலும் திரையுலக பிரபலங்கள் பத்திரிகையாளர்களிடம் இருந்து தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த வைகைப்புயல் வடிவேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் ’வாரிசு’ ’துணிவு’ இரண்டில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்று கேட்டதற்கு ’எனக்கு அது பற்றி தெரியவில்லையே! ஆனால் இரண்டு படமும் நன்றாக ஓட வேண்டும், இரண்டு படமும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்று கூறினார்.

மேலும் ’சினிமா நன்றாக இருந்தால்தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும் என்றும் கூறிய அவர், என்னுடைய முந்தைய காமெடி நடிகர்களின் கூட்டணியுடன் இணைந்து நடிக்க தயார்’ என்றும் தெரிவித்தார்.

தற்போது ‘மாமன்னன்’ ’சந்திரமுகி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன் என்று சமீபத்தில் வெளியான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருப்பதாகவும் பலரும் அந்த படத்தை பார்த்துவிட்டு தனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.

#Watch | 'வாரிசா'.. 'துணிவா'.. பொங்கலுக்கு முதலில் எந்த படம் பார்ப்பீங்க? - வடிவேலு சொன்ன பதில்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார்!#SunNews | #Vadivelu | #tiruchendur pic.twitter.com/wBdQFbWBs2

— Sun News (@sunnewstamil) December 24, 2022

More News

தனுஷ் இதுவரை நடிக்காத கேரக்டர்: எச் வினோத் அடுத்த படம் குறித்த மாஸ் தகவல்

தனுஷ் இதுவரை 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் அவரை நடிக்க இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் எச் வினோத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பொம்பளைய கதறவிட ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது.. த்ரிஷாவின் 'ராங்கி' டிரைலர்

த்ரிஷா நடித்த 'ராங்கி' என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன.

எனக்கான விடுதலையை நான் தான் போராடி வாங்கணும்: சேரனின் 'தமிழ்க்குடிமகன்' டீசர்

 நீண்ட இடைவேளைக்கு பின்னர் சேரன் நடித்த 'தமிழ்க்குடிமகன்'  என்ற படத்தின் டீசர் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த டீசரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்தின் 'துணிவு' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? ரசிகர்கள் ஆச்சரியம்!

'துணிவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர்

நடிகர் விஜயகுமாருக்கு என்ன ஆச்சு? அருண்விஜய் விளக்கம்!

பழம்பெரும் நடிகர் விஜயகுமார் குறித்த வதந்தி ஒன்று மிக வேகமாக இணையதளங்களில் வைரலான நிலையில் அதற்கு அவரது மகனும் நடிகருமான அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.