close
Choose your channels

தனுஷ் இதுவரை நடிக்காத கேரக்டர்: எச் வினோத் அடுத்த படம் குறித்த மாஸ் தகவல்

Friday, December 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் இதுவரை 40 படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில் இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் அவரை நடிக்க இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் எச் வினோத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை இயக்குனர் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த தகவலை அவர் உறுதி செய்துள்ளார்

தன்னுடைய அடுத்த படம் ஒரு உண்மை கதை என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் சந்தித்த நிகழ்வு தான் அந்த படத்தின் கதை என்றும் எச் வினோத் கூறியுள்ளார். இதனை அடுத்து தனுஷ் அந்த படத்தில் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதுவரை காவல்துறை அதிகாரி கேரக்டரில் தனுஷ் நடிக்காத நிலையில் முதல் முறையாக அந்த கேரக்டரில் அவரை பார்க்க அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்தநிலையில் தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.