தாங்கி பிடிக்க தயங்க வேண்டாம்: முதல்வர் பழனிசாமிக்கு வைரமுத்து வேண்டுகோள்

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. பல திரையுலக பிரபலங்கள் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு அளித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் டுவிட்டுகளையும் அறிக்கைகளையும் பதிவு செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

குறிப்பாக புதிய கல்விக்கொள்கையில் உள்ள ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி கல்வி என்ற சரத்தை எதிர்க் கட்சிகள் உள்பட அனைவருமே பாராட்டி வருகின்றனர். இது குறித்து கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் மும்மொழி கொள்கை என்ற சரத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை தமிழகத்துக்கு தேவையில்லை என்றும் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, பின்பற்றிய இருமொழிக் கொள்கையை போதும் என்றும் முதல்வர் பழனிச்சாமி அவர்களுக்கு கவியரசு வைரமுத்து டுவிட் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது

அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும்,
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும்
இருமொழிக் கொள்கைதான்.
முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத்
தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை.
தேசியக் கொடியை மதிப்போம்;
திராவிடக் கொடியும் பிடிப்போம்.

கவியரசு வைரமுத்து அவர்களின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது
 

More News

இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட்: லேப் டெக்னீஷியன் கைது!

இளம் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கொரோனா டெஸ்ட் எடுத்த லேப் டெக்னீசியன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடன் கட்ட அவகாசம் தந்துவிட்டு வட்டி போடுவதா? கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கும் மேல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கோடிக்கணக்கானோர் வேலையிழந்து, வருமானம் இழந்து

சென்னை தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து: அதிர்ச்சி காரணம்

சமீபத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் குறித்து ஐ.எம்.ஏ தனது பரிந்துரைகளை தெரிவித்து இருந்தது. அதன்படி லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை

ஸ்மார்ட்போன் கூட வாங்க முடியாத மாணவிக்கு ஐபோன் அனுப்பிய தமிழ் நடிகை!

நீட் தேர்வுக்கு தயார் செய்ய ஸ்மார்ட்போன் கூட வாங்க முடியாமல் கஷ்டப்பட்ட மாணவி ஒருவருக்கு தமிழ் நடிகை ஒருவர் ஐபோன் வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடுவானில் மோதிக்கொண்ட இரு விமானங்கள்… 7 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகே இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அம்மாகாண உறுப்பினர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.