மதுரைக்கார மன உறுதியும் மருத்துவமும் உங்களை மீட்டெடுக்கும்: வைரமுத்து

தேமுதிக தலைவரும் கேப்டன் என்று அன்புடன் ரசிகர்களாலும் தொண்டர்களும் அழைக்கப்படுவருமான விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவர் குணமடைவார் என்றும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் தங்களது சமூக வளைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த் விரைவில் குணமடைய தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

அன்புள்ள கேப்டன்!
உங்கள் துணிச்சலும்,
‘மதுரைக்காரன்’ என்று கருதும்
மன உறுதியும், மருத்துவத்தின்
உறுதுணையும் இந்த நோயிலிருந்தும்
உங்களை மீட்டெடுக்கும்;
வாழ்த்துகிறேன்.

More News

விஜயகாந்துக்கு கொரோனா எப்படி வந்தது? பிரேமலதா பேட்டி!

கேப்டன் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு கொரோனா எப்படி ஏற்பட்டது

எல்லைத் தாண்டி ரோந்து பணியாற்றிய அதிகாரி… மண்ணெய் ஊற்றி எரித்த கொடூரச் சம்பவம்…

சர்வாதிகாரத்தின் உச்சமாகக் கருதப்படும் வடகொரியா தற்போது கொலை நடுங்க வைக்கும் ஒரு சம்பவத்தை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தினமும் அடி, உதை… கணவரின் தொல்லை தாங்காமல் கொன்று, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்த மனைவி!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் இளம்பெண் ஒருவர் கணவருடன் நடந்த வாக்குவாதத்தின்போது கயிற்றைக் கொண்டு அவரது கழுத்தை இறுக்கியிருக்கிறார்.

விஜயகாந்த் எப்படி இருக்காரு? நலம் விசாரித்த ரஜினிகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி: தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு 

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து 10, 11, 12 வகுப்புகளின் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்