close
Choose your channels

வைரமுத்து-வின் "நாட்படு தேறல்" 7-ம் பாடல்...! நெஞ்சை உருக்கும் காதல் வரிகள்...!

Sunday, May 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வைரமுத்து-வின் "நாட்படு தேறல்" 7-ம் பாடல்...! நெஞ்சை உருக்கும் காதல் வரிகள்...!

வைரமுத்து அவர்களின் "நாட்படு தேறல்" என்ற தலைப்பின் கீழ், 7 ஆம் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பில் 100 பாடல் வரிகளை உருவாக்கியுள்ளார். இப்பாடல்கள் 100 இயக்குனர்கள், 100 இசையமைப்பாளர்கள் மற்றும் 100 பாடகர்கள் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை வந்த 6 பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.அந்த வகையில் 7-வது பாடல், காதல் தோல்வி பாடலாக அமைந்துள்ளது. காதலித்து தோல்வியுற்றவர்களுக்கு, இப்பாடல் அருமருந்தாக உள்ளது என்றே சொல்லலாம்.



இதுகுறித்து வைரமுத்து அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

"நான் எக்கச்சக்கமாக ரசித்த
ஏழாம் பாடல்.

நான் எழுதிய
சிறந்த நாட்டுப்புறப் பாடல்கள்
பத்தில் ஒன்று என்று
இந்தப் பாடலைக் கருதுகிறேன்.

உடைந்த வாழ்வின்
கண்ணாடிச் சிதறல் இது.

ஒவ்வொரு துண்டிலும் தெரியலாம்
உங்கள் வாழ்வின் பிம்பமும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.