சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி: கீழடி குறித்து வைரமுத்து

  • IndiaGlitz, [Saturday,September 21 2019]

கல்தோன்றி மண் தோன்றும் காலத்திற்கு முன்பே தோன்றியது தமிழ் நாகரீகம் என நமது முன்னோர்கள் கூறி வந்தாலும், வரலாற்று ஆய்வாளர்களின் குறிப்புப்படி சிந்து சமவெளி நாகரீகமே உலகின் மூத்த நாகரீகம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்துள்ள தகவல்கள், பொருட்கள் ஆகியவை ஆய்வுக்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவின்படி இந்தியாவின் வரலாறே மாற்றி அமைக்கும் வகையில் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முந்தையது தமிழ் நாகரீகம் என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி, தமிழ்குடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி. மேலும் ஊடகங்களின் ஒளி வேண்டும்; மத்திய அரசின் துணை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகிற்கே மூத்த மொழியாக இருக்கும் தமிழ் மொழியை இந்தியாவின் பொதுமொழியாக அறிவிக்க வேண்டும் என்ற குரல் சமூக வலைத்தளங்களில் ஓங்கி ஒலித்து வருகின்றது.

More News

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அரசியல் கட்சிகளின் ரியாக்சன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என சற்றுமுன் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

சிபிராஜ் ஜோடியாக நடிக்கும் விஜய் பட நாயகி!

நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் ஏற்கனவே சில படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இருவரும் 'நாய்கள் ஜாக்கிரதை' இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்

த்ரிஷாவின் ''பரமபதம் விளையாட்டு' சென்சார் தகவல்கள்

கோலிவுட் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா தற்போது சுமார் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. 

மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் இணையும் சூர்யா-ஆர்யா?

நடிகர் சூர்யா மற்றும் ஆர்யா நடிப்பில் இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கிய 'காப்பான்' திரைப்படம் நேற்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

'கோமாளி' வெற்றியால் இயக்குனருக்கு கிடைத்த 'ஹோண்டாசிட்டி!

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய 'கோமாளி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.