close
Choose your channels

சிபிராஜ் ஜோடியாக நடிக்கும் விஜய் பட நாயகி!

Saturday, September 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் ஏற்கனவே சில படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இருவரும் ’நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறித்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம். திகில் மற்றும் மர்மம் கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க நடிகை நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’புலி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா ஒரு பத்திரிகையாளராக நடித்து வருவதாகவும் இவரது கேரக்டர் இந்த படத்தின் கதையில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று இருப்பதால் இந்த படத்திற்கு பின்னர் இவர் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை பட்டியலில் வருவார் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் முழுக்க முழுக்க திகில் காட்சிகள் இருப்பதாகவும் அதனால் இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளே இந்த படத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.