எந்தவித அறிவிப்பு இல்லாமல் வெளிவரும் 'வலிமை' ஃபர்ஸ்ட்சிங்கிள்! எப்போது தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,August 02 2021]

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். அனேகமாக அடுத்த மாதம் ‘வலிமை’ படக்குழுவினர் ரஷ்யா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பது தெரிந்தது. அந்த வகையில் இன்று இரவு 10 மணிக்கு ‘வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது.

எந்தவித முன்னறிவிப்புமின்றி ‘வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பது ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இந்த தகவல் இணையதளங்களில் கசிந்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ‘வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் குறித்த ஹேஷ்டேக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருப்பதை அடுத்து அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல நடிகரின் மகன்....! இப்ப நம்ம ஊரு சப் கலெக்டர்.....!

கடந்த 2019-ஆம் ஆண்டு  நடைபெற்று முடிந்த ஐஏஎஸ் தேர்வில், இந்திய அளவில்  75-ஆவது இடம்

நாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!

பகத்சிங் தூக்கிலடப்படுவதைப் போன்று ஒத்திகை பார்த்த 10 வயது சிறுவன் உத்திரப்பிரதேச மாநிலத்தில்

சீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்!

தமிழக அரசியலில் 3 ஆவது பெரும் தலைவராக உருவெடுத்து இருக்கும் திரு.சீமான் குறித்து நாடி ஜோதிடர் பாபு அவர்கள் ஒரு வியக்க வைக்கும் தகவலை கூறியிருக்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற வீராங்கனை? மலைக்க வைக்கும் ஆச்சர்யம்!

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டிகள் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம்… சாதனை படிகளில் பி.வி.சிந்து!

8 வயதில் பேட்மிண்டன் விளையாட துவங்கிய பி.வி.சிந்து வெறும் 26 வயதிலேயே, ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இருமுறை பதக்கம் வென்றுள்ளார்.