close
Choose your channels

ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகும் 'வல்லவன் வகுத்ததடா': பத்திரிக்கையாளர் சந்திப்பு  !!

Friday, April 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஃபோக்கஸ் ஸ்டுடியோ சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங்க் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா”. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் இயக்குநர் விநாயக் துரை பேசியபோது, ‘வாழ்த்த வந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. எங்களின் 2 வருட போராட்டம் தான் இந்தப்படம். இந்தப்படத்தின் மீது வெளிச்சம் விழக்காரணம் தனஞ்செயன் சார் தான் அவருக்கு நன்றி. தனஞ்செயன் சார் படம் பார்த்து விட்டு படம் பிடித்திருக்கிறது என்று சொன்னபோது, அவர் தான் கால் பண்ணிப்பேசுகிறாரா ? என ஆச்சரியமாக இருந்தது. எங்களை வெகுவாக பாராட்டி அவர் பேனரையும் தந்துள்ளார்.

தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் வல்லவன் வகுத்ததடா படத்தின் மையம். பணம் 5 பேர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது தான் படம். படத்தில் நடித்துள்ள ராஜேஷ் அண்ணா எப்போதும் எனக்குத் துணையாக இருந்துள்ளார். ஹைனா மாதிரியான மேனரிசத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். சுவாதி நடிக்க கேட்டபோது அவர் வீட்டில் கூப்பிட்டு இன்டர்வியூ மாதிரி வைத்துத் தான் அனுப்பி வைத்தார்கள். அவரும் நன்றாக நடித்துள்ளார். அருள் ஜோதி அண்ணா எனக்காக மட்டும் நடித்துத் தந்தார். மியூசிக் டைரக்டர் அட்டகாசமாக மியூசிக் செய்துள்ளார். இப்படத்தின் எடிட்டர், ஒளிப்பதிவாளர் எல்லோருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது ஏப்ரல் 11 படம் வருகிறது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை ஸ்வாதி பேசியதாவது, ‘ஆக்டிங் ஸ்கூல் படிக்கும்போது நடிக்கும் ஆர்வம் இருந்தது ஆனால் அது முடியவில்லை. ஆனால் நடிப்பின் மீதான ஆர்வத்தில் சின்ன சின்ன போட்டோஷூட், மாடலிங் எல்லாம் செய்தேன். ஆனால் முதல் பட வாய்ப்பே, மெயின் லீடாக கிடைக்கும் என நினைக்கவில்லை. கார்த்திக் சாருக்கு நன்றி. இந்த படத்தில், இந்த டீமிடம் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லோரும் கடினமாக உழைத்து தான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். எல்லோருக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் இந்த படம் வெற்றியைத் தர வேண்டுகிறேன். தனஞ்செயன் சாருக்கு என் நன்றிகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, ‘சிறு தயாரிப்பு படங்களை எப்போதும் ஆதரிக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என்னால் முடிந்தவரை தினமும் படங்கள் பார்த்து வருகிறேன் பல படங்களை எங்கள் நிறுவனம் மூலம் ஓடிடியில் விற்றுத் தந்தோம். எறும்பு முதலாகப் பல படங்கள் ஓடிடியில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் தான் கேபிள் சங்கர் சொல்லி இந்த படம் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. விநாயக் துரை மிக அழகாகத் திரைக்கதை எழுதியுள்ளார். இதில் நடித்துள்ள ராஜேஷ் ஹைனாவின் வித்தியாசமான குணங்களோடு நடித்திருந்தார், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார்கள். நாயகி தமிழில் பேசி நடித்திருப்பது அருமை. வல்லவன் வகுத்ததடா தனித்துவமான படம். இது புதியவர்களின் முயற்சி, ஊடகங்களின் ஆதரவு வேண்டும் அது இருந்தால் தான் ஓடிடி பிசினஸ் செய்ய முடியும். எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இப்படத்திற்கு செய்து வருகிறோம். உங்கள் கடமையாக நினைத்து இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

5 கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை, பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர்லிங்க் திரைக்கதையில் சொல்லும், க்ரைம் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்‌ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.