சினிமா வசனம் பேசி மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம்: பாஜக பிரபலம்

  • IndiaGlitz, [Tuesday,September 15 2020]

சினிமா வசனம் பேசி மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம் என பாஜக பிரபலம் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வு குறித்தும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சமீபத்தில் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலரும் சூர்யாவின் கருத்துக்கள் சரிதான் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் உள்பட ஒருசில பாஜக பிரமுகர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது மற்றொரு பாஜக பிரபலமான வானதி ஸ்ரீனிவாசன் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சினிமாவில் வசனம் பேசுவதை போல மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் மாணவர்களின் தற்கொலையைத் தொடர்ந்து போட்டி தேர்வுகளே கூடாது என்பதுபோல் சூர்யா பேசுகிறார் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

More News

எய்ம்ஸ்-இல் எம்பிபிஎஸ் படித்த 25 வயது டாக்டர் கொரோனாவுக்கு பலி!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த 25 வயது இளம் டாக்டர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு… தமிழக அரசின் அதிரடி!!!

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) குறித்த விவாதம் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் சூர்யா கல்வி அமைச்சராக வேண்டும்: தமிழ் நடிகர் விருப்பம்!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடே குரல் கொடுத்துக் கொண்டு வந்தாலும் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைலாசா நாட்டு பெண்களை வரன் கேட்கும் நம்ம ஊரு 90 கிட்ஸ்… வைரல் சம்பவம்!!!

நித்யானந்தா தான் உருவாக்கிய கைலாசா நாட்டை பற்றிய அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தைப் பலரும் கிண்டலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

கனடா பிரதமரையும் விட்டுவைக்காத 'இந்தி தெரியாது போடா': நெட்டிசன்களின் கைவரிசை!

'இந்தி தெரியாது போடா' மற்றும் 'I am a தமிழ் பேசும் இந்தியன்' போன்ற வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்டுகளை கடந்த சில நாட்களாக திரையுலக பிரமுகர்கள் அணிந்து வைரலாகி வருகின்றனர் என்பது தெரிந்ததே