close
Choose your channels

சினிமா வசனம் பேசி மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம்: பாஜக பிரபலம்

Tuesday, September 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா வசனம் பேசி மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம் என பாஜக பிரபலம் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வு குறித்தும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சமீபத்தில் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலரும் சூர்யாவின் கருத்துக்கள் சரிதான் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் உள்பட ஒருசில பாஜக பிரமுகர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது மற்றொரு பாஜக பிரபலமான வானதி ஸ்ரீனிவாசன் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "சினிமாவில் வசனம் பேசுவதை போல மாணவர்களின் வாழ்க்கையில் சூர்யா விளையாட வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் மாணவர்களின் தற்கொலையைத் தொடர்ந்து போட்டி தேர்வுகளே கூடாது என்பதுபோல் சூர்யா பேசுகிறார்" என்றும் வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.